Skip to content

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு

பண்டாரவாடை – வளைகுடா  வாழ் நண்பர்களால் ஐக்கிய அரபு அமீரகம் -துபாய் மண்டலத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை 

அமைப்பு,

பண்டாரவாடை சகோதரர்களை ஒருங்கினைத்து ஒற்றுமையோடு செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு எவ்வித இயக்கத்திற்கும் சார்ந்ததல்ல. இந்த அமைப்பில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமானால் எவ்வித நிபந்தனையும், குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பண்டாரவாடையில் பிறந்து வளர்ந்தவராகவோ, அல்லது குடிபெயர்ந்தவரகவோ இருத்தல் வேண்டும்.

மேலும், இந்த அமைப்பு தனிப்பட்ட முடிவுகளை எடுக்காது, முழுக்க முழுக்க பண்டாரவாடை –  வளைகுடா வாழ் நண்பர்களின் ஆலோசனை பெற்று நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள். பண்டாரவாடை வளர்ச்சிக்கு அமைப்போடு உறுதுணையாய் நின்று செயலாற்ற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

திட்டங்களும்நோக்களும்

1. மருத்துவ சேவை :

நமதூர் மக்களிடத்தில் நோய்களைப்பற்றி விழுப்புணர்வு பெற சிறந்த மருத்துவர்களை கொண்டு சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றிட உள்ளோம்.

•கண் பரிசோதனை முகாம்.
•சர்க்கரை நோய்-நிரழிவு நோய் பரிசோதனை முகாம்.
•பருவங்களில் ஏற்படும் நோய் பற்றி விழுப்புணர்வு.
•இரத்ததான முகாம்.
•சுற்று சுழல் சுகாதார விழுப்புணர்வு முகாம்.

2. மார்க்க கல்வி – உலக கல்விவிழுப்புணர்வு :

நமதூர் மக்களிடத்தில் மார்க்க பிரச்சார சொற்பொழிவு, பெண்களுக்கான மார்க்க சமந்தப்பட்ட பிரச்சார சொற்பொழிவு ,குரான் மற்றும் ஹதீஸ் சொற்பொழிவுகள் போன்ற திட்டகளுக்கும், உலக கல்வி சமந்தமான மேற்படிப்பு ஆலோசனைக்கும் வேலைவாய்ப்பு தகவல் மற்றும் ஆலோசனைக்கும் மற்றும் சட்ட உரிமைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

3. கல்வி உதவிகள் :

•நமதூர் மாணவ மாணவிகள் பலர் தகுதி இருந்தும் படிக்க வசதியற்றவர்களுக்கு நிதி உதவி அளிப்பது.
•மேற்படிப்பிற்கு சிறந்த ஆசிரியர்கள். கல்வியாளர்களை கொண்டும் கலந்துரையாடல், கல்வி வழிகாட்டி முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள்     பெற்றோர்களுக்கும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

4ஆங்கில கல்வி :

நமதூரில் படித்துகொண்டு இருக்கும் மாணவர்களுக்கு. படித்து முடித்து வேலை தேடிக் கொண்டுருக்கும் நண்பர்களுக்கும் ஆங்கில புலமையை மேம்படுத்தும்  விதமாக சிறந்த ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்களை கொண்டு ஆங்கில பயிற்சி அளிப்பது.

5. வேலைவாய்ப்பு :

நமதூரில் இருந்து வேலை தேடி வளைகுடா வரும் நண்பர்களுக்கு உதவும் விதமாக குரூப் இ -மெயில் மூலம் அணைத்து நமதூர் நண்பர்களுக்கும் தெரியபடுத்தி தகுதியான வேலை கிடைக்க முயற்சி  செய்வது.

6. பசுமை திட்டம் :

சுற்று சுழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் மற்றும் கிராமத்தை பசுமையான சுழலை ஏற்படுத்துவது.

மேற்கண்ட நற்பணிகள் வளைகுடா வாழ் பண்டாரவாடை நண்பர்களால் தீர்மானிக்கபட்டது . நம் ஊர் வளர்ச்சிக்கு சேவையாற்ற இந்த வாய்ப்பை வழங்கிய வல்ல இறைவனுக்கு நன்றி-ஐ செலுத்துவோம்.மேலும் நம் ஊர் சகோதரர்களுக்கும் இந்த ஹிதாயத் கிடைக்க இறைவனிடம் துவா செய்வோம்.

மற்றவர்களுக்கு உதவுவதை அல்லாஹ் கூறுகிறான்.

”தனது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஓர் தானியம் அது ஏழு கதிர்களை முளைக்க செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்கு கொடுக்கிறான். அவனே தரளமானவன் அறிந்தவன்” – அல்-குரான்

 
Read more…

Advertisements

Pandaravadai பண்டாரவாடை பெயர் வர காரணம் என்ன? விளக்கம் தருகிறார் — பண்டாரவாடை கோட்டையார் அக்பர் அலி #pandaravadai

Pandaravadai பண்டாரவாடை பெயர் வர காரணம் என்ன? விளக்கம் தருகிறார் — பண்டாரவாடை கோட்டையார் அக்பர் அலி #pandaravadai

 

 

பண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016

pandaravadai பண்டாரவாடை image

                                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

பண்டாரவாடை மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் & குடும்பத்தினர் பெயர்  இருப்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.

( வாக்காளர் பெயர் பட்டியல் -2016,  தமிழ்நாடு அரசு தேர்தல் இணையதளம், PDF File:)

***வார்டு-1***

வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-467 பெண்-487  மொத்தம்-954

1-கப்பி ரஸ்தா வார்டு – 1
2-லாடுகன்ல தைக்கால் வார்டு – 1
3-கரைமேடு வார்டு – 1
4-மேலத்தெரு Read more…

பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம்.

View Electoral Rolls in PDF format starting from 107 page pandaravadai பண்டாரவாடை voters list

http://www.elections.tn.gov.in/pdf/ac172.htm

பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016

பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016

பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016

பாபநாசம் தொகுதி தேர்தல் 2016

 

பாபநாசம் தொகுதி 2016


ரவுண்ட்-அப்

172-பாபநாசம்

பாபநாசம் மொத்த வாக்காளர்கள் 2,38,119

ஆண் 1,18,172

பெண் 1,19,943

திருநங்கை 4

2016 களத்திலுள்ள வேட்பாளர்கள்:

இரா.துரைக்கண்ணு – அதிமுக

ஹூமாயின் – நாம் தமிழர் கட்சி

குணசேகரன் – பாஜக

ஆலயமணி – பாமக

ஜெயகுமார் – தமாக

டி.ஆர்.லோகநாதன் – காங்கிரஸ் (திமுக)

A.முஹம்மது ஃபாருக் – SDPI

 

பண்டாரவாடை

அஸ்ஸலாமு அழைக்கும்…  

Pandaravadai பண்டாரவாடை Ward detail & voting Booth

Read & Share This…

image

Read &  share This…

image

பண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை
((2016 சட்டமன்றத் தேர்தல்))

Ward-1 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-467 பெண்-487 மொத்தம்-954 ((வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி))

Ward-2 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-461 பெண்-502 மொத்தம்-963
((வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி))

Ward-3 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-348 பெண்-376 மொத்தம்-724
(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி இரயிலடி)

Ward-4 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-450 பெண்-486 மொத்தம்-936
(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி, இரயிலடி)

Ward-5 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-499 பெண்-545 மொத்தம்-1044
((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))

Ward-5a வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-530 மொத்தம்-1012
((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))

Ward-6 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-504 மொத்தம்-986
((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))

ஆண் வாக்காளர்கள் = ***3189***
பெண் வாக்காளர்கள் = ***3430***
Total வாக்காளர்கள் = ***6619***

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி. ***ஒரு பாா்வை***

image

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின், வரிசை எண்  172 இல்    பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) 

பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதி இது. வட்டத் தலைநகராக பாபநாசம் உள்ளது. வலங்கைமான் தனித் தொகுதி கலைக்கப்பட்ட போது அதிலிருந்த அம்மாப்பேட்டை ஒன்றியம் முழுவதும், கும்பகோணம் ஒன்றியத்தின் ஒரு பகுதி, சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து இத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது.

திருவையாறு சாலையில் சோமேஸ்வரபுரம், நாகை சாலையில் பூண்டி, கும்பகோணம் சாலையில் திருபாலைத்துறை, கபிஸ்தலம் சாலையில் பொன்பேத்தி, தஞ்சை சாலையில் பசுபதிகோயில் வரை ஆகும்.

பாபநாசம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
பாபநாசம் ஒன்றியத்தின் 34 ஊராட்சிகள்,

அம்மாப்பேட்டை ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள்,

கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், மற்றும்

பேரூராட்சி- பாபநாசம், அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, மெலட்டூர், சுவாமிமலை .

ஊராட்சிகள்-

             பாபநாசம் ஒன்றியம்: அலவந்திபுரம், ஆதனூர், இழுப்பைக்கோரை, ஈச்சங்குடி, உமையாள்புரம், உம்பலப்பாடி, உள்ளிக்கடை, ஓலைப்பாடி, கணபதியக்ரஹாரம், கபிஸ்தலம், ஊனஞ்சேரி, கொந்தகை, கோபுராஜபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, சக்கராப்பள்ளி, சத்தியமங்கலம், சரபோஜிராஜபுரம், சருக்கை, சூலமங்கலம், சோமேஸ்வரபுரம், தியாகசமுத்திரம், திருமண்டங்குடி, திருவைக்காவூர், துரும்பாவூர், பசுபதிகோயில், பண்டாரவாடை, பெருமாள்கோயில், மணலூர், மேலகபிஸ்தலம், ராஜகிரி, ராமானுஜபுரம், ரகுநாதபுரம், வழுத்தூர், வீரமாங்குடி.
          அம்மாப்பேட்டை ஒன்றியம்: அருந்தவபுரம், கருப்பமுதலியார்கோட்டை, புளியகுடி, கம்பர்நத்தம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம், திருபுவனம், அருமலைக்கோட்டை, சென்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, கத்தரிநத்தம், ஆலங்குடி, களக்குடி, நெல்லித்தோப்பு, குமிளக்குடி, புலவர்நத்தம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், இரும்புத்தலை, விழுதியூர், கொத்தங்குடி, அன்னப்பன்பேட்டை, கோவிந்தகுடி, இடையிருப்பு, திருக்கருக்காவூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, செருமாக்கநல்லூர், பெருமாக்கநல்லூர், காவலூர், வையச்சேரி, வேம்புகுடி, தேவராயன்பேட்டை, திருவையாத்துக்குடி, மேலசெம்மங்குடி, உக்கடை, நெடுவாசல், மகிமாலை, மெய்குன்னம், கீழகோவில்பத்து, வடபாதி.

       கும்பகோணம் ஒன்றியம்: நாகக்குடி, திருவலஞ்சுழி, வளையப்பேட்டை, பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள்கோயில்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
2011 துரைக்கண்ணு அதிமுக
2006 துரைக்கண்ணு அதிமுக
2001 M.ராம்குமார் தமாகா
1996 N.கருப்பண்ணஉடையார் தமாகா
1991 S.ராஜராமன் காங்கிரஸ்
1989 ஜி.கருப்பையாமூப்பனார் காங்கிரஸ்
1984 S.ராஜராமன் காங்கிரஸ்
1980 S.ராஜராமன் காங்கிரஸ்
1977 R.V.சவுந்தர்ராஜன் காங்கிரஸ்

Madras State

Year Winner Party
1952 Swayamprakasam Independent
1957 Venkitachala Nattar and
K. Subramaniam Indian National Congress
1962 R. Subramanian Indian National Congress
1967 R. S. Moopanar Dravida Munnetra Kazhagam
Tamil Nadu

Year Winner Party
1971 N. Ganapathy Dravida Munnetra Kazhagam
1977 R. V. Soundararajan Indian National Congress
1980 S. Rajaraman Indian National Congress (Indira)
1984 S. Rajaraman Indian National Congress
1989 G. Karuppiah Moopanar Indian National Congress
1991 S. Rajaraman Indian National Congress
1996 N. Karupanna Odayar Tamil Maanila Congress (Moopanar)
2001 M. Ramkumar Tamil Maanila Congress (Moopanar)
2006 R. Doraikannu Anna Dravida Munnetra Kazhagam
2011 R. Doraikannu Anna Dravida Munnetra Kazhagam
(Copy)